×

உலகில் கொரோனாவால் 41.79 கோடி பேர் பாதிப்பு : ஒரே நாளில் 20,86,786 பேருக்கு தொற்று பாதிப்பு

ஜெனீவா : சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 79 லட்சத்து 21 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 8 லட்சத்து 53 ஆயிரத்து 688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 34 கோடியே 12 லட்சத்து 771 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 67 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் ஒரே நாளில் 114,108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 79,784,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 952,241 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42,752,542 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 510,441 பேராகும். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 41,900,076….

The post உலகில் கொரோனாவால் 41.79 கோடி பேர் பாதிப்பு : ஒரே நாளில் 20,86,786 பேருக்கு தொற்று பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Geneva ,Wuhan, China ,
× RELATED தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக...